வெல்லிங்டன் தமிழ் கிறிஸ்தவ ஐக்கியத்தை சார்ந்த நாங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தேவன், அவருடைய மிகுதியான கிருபையினாலே பூமியின் கடையாந்தராமாகிய நியூசிலாந்து தேசத்திலே, அவருடைய நாம மகிமைக்கென்றும் புகழ்ச்சிக்கென்றும் எங்களை வைத்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். இந்த தேசத்திலே, நாங்கள் கர்த்தரை அறிவதற்கும்-அறிவிப்பதற்கும், அவரை காண்பதற்கும்-காண்பிப்பதற்கும், அவருடைய அன்பை பெற்றுக்கொள்வதற்கும்-பகிர்ந்தளிப்பதற்கும் எங்களை நிலைநாட்டியிருக்கிறார் என்று முழுமனதோடு நம்புகிறோம். தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய பரிசுத்த ஆவியனவருக்கும் எங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தம் எங்களிலே நிறைவேறக் காண்பதே இந்த தமிழ் கிறிஸ்தவ ஐக்கியத்தின் மேலான நோக்கமாயிருக்கிறது.

இந்த இணையதளம் உங்களுக்கு மிகுந்த உபயோகாமாயிருக்கும் என்று நம்புகிறோம். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய கர்த்தர் தாமே உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.

பாஸ்டர் செ.ஸ்ரீகாந்தன்

 
 
Vision Mission Prophetic Words
 
servicetiming
 
News & Events
 
 
 
Tamil English
 
 
Prayer Request
 
 
 

Matthew 9:37-38

 

 

37“The harvest is plentiful but the workers are few. 38 Ask the Lord of the harvest, therefore, to send out workers into his harvest field.”